???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   20 , 2020  21:10:12 IST

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் கலை அரங்கில் நேற்று நடந்தது.

விழாவில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் விருதுகள் மற்றும் சிறப்பு மொழி பெயர்ப்பாளர்கள் விருது, உலக தமிழ் சங்க விருது, கலைப்பண்பாட்டு துறை கலைச்செம்மல் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற 45 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். அவர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்க பணத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களுக்காக 7 தமிழ் அறிஞர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் முதலமைச்சர் வழங்கினார்.

விருது பெற்றவர்களின் விவரம்:

2020-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது- ந.நித்தியானந்தபாரதி, 2019-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது- செஞ்சி ந.ராமச்சந்திரன், அம்பேத்கர் விருது- க.அருச்சுனன், அண்ணா விருது- கோ.சமரசம், பெருந்தலைவர் காமராஜர் விருது- மதிவாணன், மகாகவி பாரதியார் விருது- பேராசிரியர் ப.சிவராஜி, பாவேந்தர் பாரதிதாசன் விருது- த.தேனிசை செல்லப்பா, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- சே.சுந்தரராஜன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது- மணிமேகலை கண்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச் சங்கம் நம்பி, மணி ஆகியோருக்கு வழங்கப்பட்டு ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. கபிலர் விருது- புலவர் வெற்றியழகன், உ.வே.சா.விருது- வே.மகாதேவன், கம்பர் விருது- சரஸ்வதி ராமநாதன், சொல்லின் செல்வர் விருது- சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன், உமறுப்புலவர் விருது- லியாகத் அலிகான், ஜி.யு.போப் விருது- மரிய ஜோசப் சேவியர், இளங்கோவடிகள் விருது- கவிக்கோ ஞானச்செல்வன் என்ற கோ.திருஞானசம்பந்தம், அம்மா இலக்கிய விருது- உமையாள் முத்து, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது- அசோகா சுப்பிரமணியன் என்ற சோ.கா.சுப்ரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மறைமலையடிகளார் விருது- ப.முத்துக்குமாரசுவாமி, அயோத்திதாசப் பண்டிதர் விருது- புலவர் வே.பிரபாகரன், முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது- முனைவர் த.நாகராஜன் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது- சா.முகம்மது யூசுப், மஸ்தான் அலி, சிவ.முருகேசன், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, முருகுதுரை, மாலன் என்ற வே.நாராயணன், கிருசாங்கினி என்ற பிருந்தா நாகராஜன், அ.மதிவாணன் ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.


உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது மலேசிய நாட்டைச் சேர்ந்த பெ.ராஜேந்திரன், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முத்து கஸ்தூரிபாய், மொழியியல் விருது இலங்கை நாட்டைச் சேர்ந்த சுபதினி ரமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.

மரபுவழி கலை வல்லுனர் விருது கணபதி ஸ்தலபதி, ராமஜெயம், தமிழ் அரசி, கீர்த்தி வர்மன், கோபாலன் ஸ்தலபதி ஆகியோர் பெற்றனர். நவீனபாணி கலை வல்லுனர் விருது எஸ்.பி.நந்தன், கோபிநாத், ஆனந்த நாராயணன், நாகராஜன், டக்ளஸ், ஜெயக்குமார் பெற்றனர். இவர்களுக்கு கலைச்செம்மல் விருதும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

நூல் நாட்டுடமை ஆக்கப்பட்டதற்கான பரிவு தொகை தலா ரூ.5 லட்சத்தை தமிழ் அறிஞர்கள் சண்முகம், கவிஞர் நா.காமராசன், இரா.இளவரசு, அடிகளாசிரியர், புலவர் இறைகுருவனார், பண்டித மா.கோபாலகிருஷ்ணன், பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...