???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினத்தவர் யார்?

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   25 , 2019  06:18:34 IST


Andhimazhai Image
தமிழக அரசின் பதிவுகளில் திருநங்கை எனும் சொல்லுக்கு பதிலாக மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிடப்படுவது விவாதத்தை உருவாக்கி உள்ளது.
 
சில தினங்களுக்கு முன்னர் தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத்துறை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. வருகின்ற 2020 ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெறும் திருநங்கையர் தினம் குறித்த அந்த செய்திக்குறிப்பில், ஏற்கெனவே ’திருநங்கையர்’ என்று தட்டச்சு செய்யப்பட்டிருந்த இடங்களில் அழித்துவிட்டு கையால் ’மூன்றாம் பாலினத்தவர்’ என எழுதப்பட்டிருந்தது. இந்த செய்திக்குறிப்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம். கோவிந்த ராவ் கையெழுத்திட்டிருக்கிறார்.
 
தமிழக அரசின் இந்த திடீர் பெயர் மாற்றம் திருநங்கையர் சமூகத்தில் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த அறிவிப்பும், விளக்கமும் இல்லாமல் அரசு பதிவில் இவ்வாறு பெயர் மாற்றப்பட்டிருப்பது குறித்து பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
 
இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர், திருநங்கை  கனகா வரதன் “திருநங்கை எனும் சொல்லை முதன்முதலில் பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ் அவர்கள்தான் பயன்படுத்தினார். பின்னர் அந்த சொல் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கவனத்திற்கு சென்றதன் விளைவாக திருநங்கை எனும் பெயர் சூட்டப்பட்டது. முன்பு திருநங்கையரை அடையாளப்படுத்த, புழக்கத்தில் இருந்து வழக்கொழிந்த பல்வேறு பெயர்களுக்கு பிறகு திருநங்கை எனும் பெயர் கொண்டுவரப்பட்டது. இப்போது ஏன் மூன்றாம் பாலினத்தவர் என்ற பெயரை கொண்டுவருகிறார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் அரசு இதுவரை அளிக்கவில்லை,” என்கிறார்.
 
அத்துடன் , “பாலினத்தை சுய அடையாளம் செய்துகொள்வது இங்கு முதன்மையாக தேவைப்படுகிற ஒரு அடிப்படை உரிமை. இப்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கிற மசோதாவில்கூட மாற்று பாலினத்தவர் முன்வைக்கும் கோரிக்கைகளில் இதுவும் ஒரு முதன்மையான கோரிக்கை. விளக்கி சொல்ல வேண்டுமென்றால், ஒருவர் திருநரோ, பெண்ணோ அல்லது ஆணோ அவர் தன்னை எந்த பாலினமாக உணர்கிறாரோ அதே பாலினமாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் உரிமை வேண்டும். மூன்றாம் பாலினத்தவர் என வகைப்படுத்துவது முக்கியமாக இந்த உரிமைக்கு எதிரான சொல்லாக அமையும். மூன்றாம் பாலினத்தவர் என்று சொல்லிவிட்டால் ஒரு திருநங்கை தன்னை பெண் என்றோ, ஒரு திருநம்பி தன்னை ஆண் என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது.
 
மாற்று பாலினத்திலேயே திருநங்கையர், திருநம்பிகள் என அவரவர் பாலினத்தை அவரே தேர்வு செய்துகொள்ளும் வகையில் அனைவருக்கும் ‘திருநர்’ என்கிற பொதுவான பெயர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இப்போது ஏற்கெனவே வழங்கப்பட்ட ‘திருநங்கை’ பெயரையும் மாற்றும் வகையில் அரசு செயல்படுகிறது. மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிட்டால், இங்கு பெண்கள் இரண்டாம் பாலினத்தவரா? ஆண்கள் முதலாம் பாலினத்தவரா? என்ற கேள்வி எழுகிறது. திருநங்கையருக்காக அமைக்கப்பட்ட திருநங்கைகள் நல வாரியம் கூட இந்த ஆட்சியில் முறையாக செயல்படுவதில்லை என்றே கருதுகிறேன்.
 
பாஜக அரசு கொண்டுவந்துள்ள மாற்று பாலினத்தவர் மசோதாவிலும் திருநங்கை என்ற பெயருக்கு பதிலாக ‘அரவாணி’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களது மதம் சார்ந்த கொள்கையின்படி, அரவான் எனும் கடவுளின் மனைவி என்கிற பொருள்படும்விதமாக இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள். சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களிடமும்கூட மதம்சார்ந்த இப்படியான திணிப்புகளை செலுத்தும்போக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அதிலும் திடீரென தமிழக அரசு ஏன் இவ்வாறு மூன்றாம் பாலினத்தவர் என வகைப்படுத்துகிறது என்று தெரியவில்லை. அவர்களது பாலினத்தை அவர்களே தீர்மானிக்கும் வகையில், அனைவரையும் பொதுவாக ‘திருநர்’ என அழைக்கலாமே தவிர, மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
 
திருநங்கையும் செயற்பாட்டாளருமான  கிரேஸ் பானு, “தமிழக அரசின் இந்த செயல்பாடு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது,” என்கிறார். “ திருநங்கை எனும் சொல்லை நாங்கள் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கிறோம். கலைஞர் கருணாநிதியின் மூலமாக, மாற்றுபாலினத்தவர் கண்ணியத்துடன் வாழ்வதற்கு திருநங்கை எனும் பெயர் வழங்கப்பட்டது. இத்தகைய பெயரை தமிழக அரசு நீக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்போதுகூட மாற்றுபாலினத்தவர் மசோதாவை எதிர்த்து நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறாம். எங்களது போராடங்களுக்கு துணைநின்று ஆதரவளிக்காமல், இவ்வாறு தேவையற்ற பெயர் மாற்றத்தில் தமிழக அரசு ஈடுபடுகிறது. இது வெறும் வார்த்தையாக தெரியலாம், ஆனால் எங்களுக்கு இது பல போராட்டங்களாளும், பலரின் தியாகத்தாலும் கிடைத்த அடையாளம். தமிழக அரசு தனது இந்த செயல்பாடு குறித்து பதில் அளிக்கவேண்டும்” என்று சொல்கிறார்.
 
-வசந்தன்
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...