???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய வரியில் தமிழகத்துக்கான பங்குத்தொகை ரூ.1928.56 கோடி

Posted : புதன்கிழமை,   மே   20 , 2020  23:09:06 IST

மத்திய வரி மற்றும் தீர்வைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி, மாநிலங்களுக்கு மே மாதத்துக்கான தொகையாக 46 ஆயிரத்து 38 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 8 ஆயிரத்து 255 கோடி ரூபாயும், பீகாருக்கு 4 ஆயிரத்து 631 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது.

மத்தியப்பிரதேசத்துக்கு 3 ஆயிரத்து 630 கோடி ரூபாயும், மேற்குவங்கத்துக்கு 3 ஆயிரத்து 461 கோடி ரூபாயும், மகாராஷ்ட்ராவுக்கு 2 ஆயிரத்து 824 கோடியே 47 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானுக்கு 2 ஆயிரத்து 752 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு 2 ஆயிரத்து 131 கோடியே 13 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்துக்கு 1928 கோடியே 56 லட்சம் ரூபாய் விடுவிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.  அதன்படி  2020-21-ம் ஆண்டுக்கான தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக ரூ.295 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...