???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதலமைச்சர் 0 கமல் ஊழலை திசை திருப்புகிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு 0 பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் 0 கமல்ஹாசனின் அலுவலகத்தில் பலத்த போலீஸ் காவல் 0 சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : 0 மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு 0 பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளை மூட உத்தரவு 0 சசிகலாவுக்கு கூடுதல் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு: டி.ஐ.ஜி. ரூபா 0 இந்தியை அலுவல் மொழியானால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் : மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்! 0 பக்கிங்காம் தடுப்பணையில் பராமரிப்பு இல்லை: உவர் நிலமாக மாறிய விவசாய நிலங்கள் 0 நாகையை சேர்ந்த மீனவர்களை சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம். 0 தோற்றாலும் சாதனை படைத்த மீரா குமார்! 0 வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19ஆயிரம் கோடி கருப்புப் பணம்: ஜேட்லி 0 ஊழல் தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புங்கள்: கமல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக மீனவர்களின் 42 படகுகள் விடுவிப்பு :

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   17 , 2017  05:16:06 IST

2015-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை சிறைபிடிக்கப்பட்ட 42 விசைப்படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக இலங்கை கோர்ட்டு அறிவித்துள்ளது.

 

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை சிறைபிடித்து செல்வதையும், தாக்குவதையும் படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு கொண்டு  செல்வதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  இவ்வாறு புதுக்கோட்டை, ராமேசுவரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனை விடுவிக்கக் கோரி தமிழக  மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை சிறைபிடிக்கப்பட்ட 42 விசைப்படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக இலங்கை கோர்ட்டு அறிவித்துள்ளது. நாளை மறுநாள்  இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் படகுகள் ஒப்படைக்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...