செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
இலங்கை- ஜூலை19வரை புதுகை மீனவர்கள் தடுப்புக்காவலில்!
இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்களும் அந்நாட்டு நீதிமன்றத்தால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
இலங்கை- ஜூலை19வரை புதுகை மீனவர்கள் தடுப்புக்காவலில்!
Posted : செவ்வாய்க்கிழமை, ஜுலை 05 , 2022 18:20:10 IST
இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்களும் அந்நாட்டு நீதிமன்றத்தால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்கள் நேற்று திங்களன்று இலங்கையை ஒட்டிய கடல்பகுதியில் மீன்பிடிக்குச் சென்றனர். அப்போது எல்லைதாண்டி அந்நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டம் காரை நகர் பகுதியில் சென்றுவிட்டதாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் நேற்று காலையில் அவர்களைக் கைதுசெய்தனர்.
இன்று காலையில் இலங்கை அரசின் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் மூலமாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் புதுகை மீனவர்கள் ஐவரும் நிறுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களை வரும் 19ஆம் தேதிவரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த ஞாயிறன்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைதுசெய்யப்பட்ட தமிழக, புதுவை மீனவர்கள் 12 பேர் பருத்தித்துறை நீதிமன்றத்தால் வரும் 8ஆம் தேதிவரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
TN fishermen to be in Judicial custody till 19th July
|