???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   23 , 2020  21:24:13 IST

தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 24 மாவட்டங்களில் உயிரிழப்பு 100-ஐ கடந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 83 ஆயிரத்து 191 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,282 ஆண்கள், 2,043 பெண்கள் என மொத்தம் 5,325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
 
தமிழகத்தில் இதுவரை 65 லட்சத்து 19 ஆயிரத்து 891 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 469 ஆண்களும், 2 லட்சத்து 21 ஆயிரத்து 500 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 30 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 22 ஆயிரத்து 913 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 71 ஆயிரத்து 960 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
 
கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 363 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதுவரையில் தமிழகத்தில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 740 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 46 ஆயிரத்து 249 பேர் உள்ளனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...