???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

110 விதியின் கீழ் 181 அறிவிப்புகள்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   29 , 2015  23:41:54 IST

கடந்த நான்கரை ஆண்டுகளில் 110 விதியின் கீழ் 181 அறிவிப்புகளை அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா சாதனை படைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக பேரவைக் கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரை முடித்து வைத்து உரையாற்றிய சபாநாயகர் தனபால், 29 நாட்கள் நடைபெற்ற  கூட்டத்தொடரில், ஆளும் கட்சியினர் 9 மணி நேரம் 12 நிமிடங்கள் பேசியதாகவும், இதர கட்சியினர் 34 மணி நேரம் 43 நிமிடங்கள் பேசியதாகவும் தெரிவித்தார். 940 கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் உறுப்பினர்களிடம் இருந்து வரப்பெற்றதாகவும், அதில் 499 தீர்மானங்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் கூறினார்.

அரசினர் சட்ட முடிவுகள் 22 தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 110 விதியின் கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 181 அறிவிப்புகளை அளித்து முதலமைச்சர் கின்னஸ் சாதனை படைத்திருப்பதாகவும் சபாநாயகர் தனபால் கூறினார்.

இந்த கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம், கேள்வி-பதில் மற்றும் துறைவாரியாக அமைச்சர்களின் அறிவிப்புகளுடன், முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...