???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காப்போம்: தமுமுக

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   08 , 2019  21:31:33 IST

தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,'450 ஆண்டுக் காலம் முஸ்லிம்களின் வழிப்பாட்டு தலமாக இருந்த பாபர் பள்ளிவாசல் அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் நவம்பர் 9 அன்று தீர்ப்பு அளிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு 2010ல் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பை போன்றில்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் நாட்டில் நடைமுறையில் உள்ள உரிமையியல் சட்டங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அமையும் என்று நம்புகிறோம்.

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் அமைதி நிலவுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

பாபர் பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பைத் தந்தாலும் அமைதி காக்க வேண்டுமென அனைத்து தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சட்டத்தின் மீதும் உச்சநீதிமன்றத்தின் மீதும் முஸ்லிம் சமுதாயம் என்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றது. இந்த நம்பிக்கையைப் பலப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமையும் என்று முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்க்கின்றது.

தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம்." இவ்வாறு தீர்மானம் குறிப்பிடப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...