???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் எதிர்ப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   30 , 2019  01:52:57 IST


Andhimazhai Image
நாடாளுமன்றத்தில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீதான இன்றைய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், மசோதாவை கடுமையாக எதிர்த்து உரையாற்றினார்.
 
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாடாளுமன்றத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் “கல்வி தொடர்பான முடிவெடுக்கின்ற அதிகாரம் concurrent list என்கிற ஒத்திசைவு பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால்,தேசிய கல்விக் கொள்கையை வரையறுப்பதாக இருந்தாலும் தேசிய மருத்துவ ஆணையத்தை (NMC) கட்டமைப்பதாக இருந்தாலும் மாநில அரசுகளின் இசைவைப் பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு  autocratic approach என்கிற எதேச்சதிகாரமான வகையில் இதை தீர்மானித்திருப்பது வரவேற்கத் தகுந்தது அல்ல. எனவே, இதை நான் எதிர்க்கிறேன். 
 
MCI என்பது (a professional body and elected body)மருத்துவர்களையும் மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட ஒரு அமைப்பாக அது இயங்கியது. ஆனால், அதை கலைத்துவிட்டு பெரும்பான்மையாக அந்த துறையோடு தொடர்பில்லாத அதிகாரிகளை நியமிக்கக்கூடிய வகையில் இதை கட்டமைப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு bureacrat body என்று சொல்லக்கூடிய வகையில் இது அமைந்திருக்கிறது. எனவே,இந்த மசோதாவை நான் விசிக சார்பில் எதிர்க்கிறேன்.
 
மாணவர்களுக்கு கல்வியையும் மக்களுக்கு மருத்துவத்தையும் இலவசமாக வழங்குகிற அரசு தான் ஒரு சிறந்த அரசாக  (good governance) இருக்க முடியும். மருத்துவத்தையும் கல்வியையும் தனியார்மயமாக்குவது மக்கள் விரோத நடவடிக்கை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்போது இந்த ஆணையம் கல்வியை தனியார் மையப்படுத்துவதற்கும் ஊழலை மேலும் பெருக்குவதற்கும்  வழிவகுக்கக் கூடிய வகையில் தான் அமைந்திருக்கிறது. கல்வியை மேம்படுத்துவதற்கு மருத்துவத்தை மேம்படுத்துவதற்கு இது எந்த வகையிலும் பயன்தராது.
 
நீட் தேர்வு வேண்டாம் என்று நாங்கள் மிகக்கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறோம். தமிழக அரசே இது தொடர்பான அறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறது. இதுவரையில் இது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. பள்ளி கல்வி பயனற்றது என்கிற வகையில் நீட் தேர்வு அமைந்திருக்கிறது.12  ஆண்டுகள் படித்த மாணவர்கள் அந்த படிப்பால் எந்த பயனுமில்லை என்கிற வகையில் நீட் தேர்வு அமைந்திருக்கிறது. இப்போது நெக்ஸ்ட் (NEXT) என்கிற தேர்வு ஐந்தாண்டு காலம் படித்த மருத்துவ மாணவர்கள் அந்த தேர்வை எழுதினால் தான் அவர்கள் மருத்துவர்களாக பதிவு செய்ய முடியும் என்கிற ஒரு நிலையை ஏற்படுத்துவதன் மூலம் ஐந்தாண்டு காலம் அவர்கள் படித்த மருத்துவக் கல்வி பயனற்றது என்கிற நிலையை உருவாக்கியிருக்கிறது. 
 
எனவே, நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம், தேசிய மருத்துவ ஆணையமும் (NMC) வேண்டாம்,  இதை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும்” என தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து உரையாற்றினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary
Tirumavalavan opposing national medical commision bill

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...