மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் நடமாட்டதை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை இன்று முதல் குறைத்து, மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.