???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பழனிசாமி நீக்கத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் ஜெயகுமார் 0 பண்ருட்டி ராமச்சந்திரன்,செங்கோட்டையன், ஜெயக்குமாருக்கு புதிய பதவி! 0 சேதுமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றமுடியாது: மத்திய அரசு 0 டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் திடீர் விலகல்! 0 சந்திரபாபு நாயுடு செய்ததை போல தமிழக முதல்வரால் செய்ய முடியுமா?: அ. ராசா கேள்வி 0 20 பைரஸி இணையதளங்கள் முடக்கம்: தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை 0 அதிமுகவிலிருந்து கே.சி.பழனிச்சாமி நீக்கம் 0 பெண் பத்திரிக்கையாளர் அவமதிப்பு: மன்னிப்பு கேட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 சென்ற ஆண்டின் நகலாக இந்த ஆண்டு பட்ஜெட்: கமல் கருத்து 0 மா.அரங்கநாதன் இலக்கிய விருது! 0 தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல் 0 குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு 0 பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா! 0 ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு வருவாய் அதிகரிப்பு: நிதி நிலை அறிக்கை 0 சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது - மத்திய அரசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

துப்பறிவாளன் - தமிழ்நாட்டு ஷெர்லாக் ஹோம்ஸ்!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   14 , 2017  12:43:29 IST


Andhimazhai Image
 
 
ரைசின் விஷம் அடைக்கப்பட்ட சிறு தோட்டாக்கள், நைட்ரஸ் ஆக்சைடு, மின்னலை ஏற்படுத்தி ஆளைக் கொல்லுதல், மிகக்கொடூரமான கிரிமினல் கேங் என பக்காவான துப்பறியும் கதைக்கே உரிய அம்சங்களுடன் களத்தில் குதித்திருக்கிறார் மிஷ்கின். சும்மா சொல்லக்கூடாது. ஒரு கணம்கூட திரையிலிருந்து கண்ணைத் திருப்பக்கூடமுடியாத அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதை. தமிழில் இவ்வளவு வேகமான படத்தைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்டது! ஹாலிவுட்டில் வெளிவரும் ஷெர்லாக் ஹோம்ஸ், கிங்ஸ் மேன் வகையறா துப்பறியும் ஆக்‌ஷன் படங்களுக்குக்  கொஞ்சம் கூடக் குறையாத தரத்தில் வெளிவந்திருக்கிறான் துப்பறிவாளன்.
 
 
படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான விஷால் அந்த கிறுக்குத்தனமான புத்திசாலி துப்பறிவாளனான கணியன் பூங்குன்றனாக பொருந்தியிருக்கிறார். உடம்பெல்லாம் மூளை அவருக்கு! மிஷ்கினின் பிரத்யேக முத்திரைகள்   நிரம்பியிருக்கும் இப்படத்தில் விஷாலுக்கு நடிக்க, அடிதடி சாகசங்கள் செய்ய மிகப்பெரிய வாய்ப்பு. மவுத் ஆர்கன் வாசித்துக்கொண்டே அடியாட்களைப் பொளக்கும் சண்டை, சீன உணவகத்தில் சீன அடியாட்களுடனான மோதல், கடைசியில் கால் கட்டப்பட்ட நிலையில் வில்லன் வினயுடன் மோதும் காட்சி என மிஷ்கினின் கற்பனையில் உதித்த அனல் பறக்கும் பொழுதுபோக்குச் சண்டைக்காட்சிகளில் பொறிபறக்க மோதுகிறார். விஷாலுக்கு நிச்சயம் இந்த படம் மிக முக்கியமானது. அவர் கூடவே உதவியாளராக வரும் பிரசன்னா, அனு இம்மானுவேல், காவல்துறை அதிகாரியாக வரும் ஷாஜி எல்லோருக்கும் நன்றாக பங்களிக்க வாய்ப்பைப் பகிர்ந்து அளித்திருக்கிறார் மிஷ்கின். கிளைமாக்ஸ் காட்சியில் ஷாஜி கூட தீவிரமான போலீஸ் அதிகாரியாக சண்டை எல்லாம் போடுகிறார். வினயால் பிடிக்கப்பட்டு, கத்தியால் குத்து வாங்கி, வலியில் தவிக்கும் காட்சியில் பின்னுகிறார்! அனு இம்மானுவேல் அழுத்தமான செண்டிமெண்ட் பாத்திரம்! படத்தில் நெகிழ்ச்சியான காட்சிகளை அவருக்காக வைத்திருக்கிறார்கள்!
 
வில்லன் குழுவில் நாலுபேரும் கொடூரமான ஆட்கள். வினய் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க யாரை வேண்டுமானாலும் கொல்வார். அந்த குழுவில் இருந்த வயதான தாடிக்காரர் யார் என்று அடையாளம் தெரியவே இல்லை, அவர் வாயைத் திறந்து வசனம் பேசும்போதுதான் அட அவரா இவர் என்று அடையாளம் கண்டுகொள்கிறோம்!  அவரது முடிவும் மிஷ்கினின் முத்திரைக் காட்சிகளில் ஒன்று! ஆண்ட்ரியாவைக் காட்டியவுடன் தியேட்டரில் விசில் பறக்கிறது! ஹாலிவுட் ஸ்டைலில் செமத்தியான வில்லி! ஆளைக் கொல்வதிலும் என்ன அழகு! காமிஸ் புத்தகங்களில் மட்டும் பார்த்திருக்கும் ஆபத்தான அழகி!
 
 
குறிப்பிட்டுச்சொல்லவேண்டிய காட்சி, ஆண்டிரியாவும் அந்த மொட்டைப் பையனும் பைக்கில் தப்பிச்செல்லும் காட்சி. விஷால் போலீஸ் பைக்கில் துரத்த, போலீஸ் சைரன் ஒலியையே பின்னணி இசையாகப் போட்டு திக் திக்கென்று இதயத்தை எகிற வைக்கிறார்கள். மிகப் பிரமாதமான துரத்தல் காட்சி!  இசை அரோல் கரோலி. என்ன சார் குத்துப்பாட்டு வைக்கலையே என்று பார்வையாளர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள்! கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்க ஒன்று. 
 
 
படம் சுவாரசியம் கூடுதலாக இருப்பதற்கு சில விஷயங்களை பார்வையாளர்களே எளிதாக ஊகித்துவிடும் வண்ணம் அமைத்திருப்பதும் ஒரு காரணம். தனக்குத் தெரிந்தது மிகச்சிறந்த துப்பறிவாளனான விஷாலுக்கு த்தெரியவில்லையே என்று ஒரு இரண்டு நொடிகளாவது துடிக்கிறார்கள். எலும்புத்துண்டு மாதிரி அப்படி சில விஷயங்களை பார்வையாளர்களுக்காகவும் திட்டமிட்டுப் போட்டிருக்கிறார் இயக்குநர். எந்த தகவலும் எதோவிதத்தில் கதை வளரப் பயனுள்ளதாக இருப்பதால் கவனமாகப் படத்தைப் பார்க்கவேண்டும். பிக்பாக்கெட் காரியான அனு இம்மானுவேலின் பிக்பாக்கெட் திறமை கூட படத்தைத் தூக்கிநிறுத்த உதவுகிறது!
 
 
ஒரு  சம்பந்தமில்லாத ஒரு முடிச்சை அவிழ்க்கப்போய் மிகப்பெரிய கிரிமினல் கும்பலைப் பிடிக்கிறார் கணியன் பூங்குன்றன் என்பதுதான் கதை.  எல்லா துப்பறியும் கதைகளிலும் கிளைமாக்ஸில் வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் துப்பறிவாளர்கள், எதையாவது வளவளவென்று பேசி அல்லது அவனைப்பற்றி தன் கண்டு பிடித்ததை எல்லாம் சொல்லி நேரம் வளர்ப்பார்கள். இப்படத்திலும் அந்த ஜானருக்கு நியாயம் செய்யும் விதமாக அதே பாணியில் க்ளைமாக்ஸ் அமைத்திருக்கிறார் மிஷ்கின். ஆனால் ஒவ்வொரு நொடியும் இருக்கை நுனிக்கு வரவைத்துவிடுகிறார்!
 
 
 யாருக்கும் தேவையில்லாமல் பேச்சு இல்லை! செம சீரியஸாய் கடமையே கண்ணாக நடித்திருக்கிறார்கள். இதுதான் பாம் தெரியுமா? என்று பாமைக் காட்டி வாய்கிழியப்பேசும் காட்சிகள் இல்லை. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஆயிரக்கணக்கான துப்பறியும் நாவல்கள் படித்திருப்பவர்கள் நிச்சயமாக கொண்டாடவேண்டிய படம்! இந்த வகை கதைகளால் அவ்வளவாக பரிச்சயமில்லாதவர்கள் கூட நிச்சயமாக ஈர்க்கப்படுவார்கள்! விஷால் போன்ற பெரிய ஹீரோவை வைத்துக்கொண்டு, மிஷ்கினின் அத்தனை முத்திரைகளும் அமைந்த செமத்தியான வணிக பொழுதுபோக்குப் படம் துப்பறிவாளன்!
 
-மிலி
 
 
 
 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...