![]() |
துணிவு: திரைவிமர்சனம்!Posted : வியாழக்கிழமை, ஜனவரி 12 , 2023 10:49:31 IST
மக்களை ஏமாற்றும் வங்கியின் பணத்தைக் கொள்ளையடித்து மக்களுக்கே கொடுக்கும் நாயகனின் கதையே துணிவு திரைப்படம்.
அஜித் – எச். வினோத் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது படம் என்பதாலும், விஜய் நடித்த வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாவதாலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. அதேபோல், சமீபகாலமாக வரும் படங்களில் ஏதேனும் ஒரு சமூகப் பிரச்னை பேசப்படுவது போல், இந்த படத்திலும் தனியார் வங்கியின் கொள்ளையை ஓரளவு பேச முற்படுகிறது.
ஜிப்ரான் பின்னணி இசை கைக்கொடுத்த அளவுக்கு அவரின் பாடல்கள் கைக்கொடுக்கவில்லை. படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பாராட்டத்தக்கது.
|
|