![]() |
திமுகவை எதிர்க்க சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்! குருமூர்த்தி பரபரப்பு பேச்சு!Posted : வியாழக்கிழமை, ஜனவரி 14 , 2021 10:13:43 IST
சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.
இவ்விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, "இந்துக்களுக்கு வாக்குவங்கி உருவாகி வருகிறது; வரும் தேர்தலில் குறைவாக இருந்தாலும், அடுத்த முறை மாற்றம் வரும். தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாகத் திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாகக் காரணம். யார் தேசியத்தை விரும்புகிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க விரும்பும் சூழல் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுமை உள்ளது. அது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது. வீடு பற்றி எரியும்போது அதில் கங்கை ஜலம் மட்டும் ஊற்ற காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலமும் ஊற்றலாம். அதுபோல திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர் களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறி உள்ளார்.
|
|