???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தார்கொள்முதல் வழக்கு : நான்கு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: வைகோ அறிக்கை! 0 டெங்குவை சுகாதாரப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 ராஜினாமா செய்யவில்லை: திருநாவுக்கரசர் மறுப்பு 0 பெங்களூருவில் மெர்சல் திரையிடல் நிறுத்தம் 0 பணிமனை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் அறிவிப்பு 0 போக்குவரத்து கழக கட்டிட விபத்து: அமைச்சர் ஓ. எஸ். மணியனை முற்றுகையிட்ட மக்கள் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் 0 சுகாதார சீர்கேட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை: இந்தியாவுக்கு முதலிடம்! 0 'மெர்சல்' வசூல் சாதனை! 0 மெர்சல் பட வசனங்களில் உண்மையில்லை: பொன்.ராதகிருஷ்ணன் 0 நிலவேம்பு கசாயத்தை ஆய்வு செய்திருக்கிறோம்: சுகாதார செயலர் 0 "நடிகர் கமல்ஹாசன் மருத்துவரா? விஞ்ஞானியா?" 0 அரசு போக்குவரத்து கழக கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் பலி 0 முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஜினி - கமல் இருவராலும் ஊழலற்ற நிர்வாகத்தை தர முடியாது: திருமாவளவன் பேட்டி.

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   20 , 2017  02:28:26 IST


Andhimazhai Image

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பரபரப்பாக பேசப்பட்டபோது நான் தெரிவித்த அதே கருத்து நடிகர் கமலுக்கும் பொருந்தும். அதாவது அரசியலில் ஈடுபட வரையறை எதுவும் கிடையாது. இந்திய குடிமகனாக இருந்தால் மட்டும் போதும். முன்பே போராட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும். சேவை செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறை எதுவும் இல்லை. வயது வரம்பும் இல்லை.

 

கமலஹாசன் ஆட்சி நிர்வாகம் பற்றி சொன்ன கருத்துக்கள் ஒன்றும் புதியதல்ல. பொதுமக்களும் பேசுவது தான். உடனே அமைச்சர்கள் ஒருமையில் அவரை சாடினார்கள். இது கமலின் தன்மானத்தை சீண்டியது. ஆகவே இந்தி எதிர்ப்பின் போதே அரசியலுக்கு வந்து விட்டதாக தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

 

அவருக்கும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. ஜனநாயகத்தில் அனைவருக்கும் இந்த உரிமை உண்டு. கமல் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பதோ, விமர்சிப்பதோ தேவையில்லாதது. ஆனால் ரஜினி, கமல் இருவருக்குமே அரசியலில் ஈடுபட ஆர்வம் இருப்பது வெளிப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே அரசியலுக்கு வந்தால் சினிமா கவர்ச்சியில் தமிழகம் மேலும் சில பத்தாண்டுகள் மூழ்கும்.

 

ஊழலற்ற ஆட்சி, நிர்வாகம் என்பது நேர்மையான அரசியல் சிந்தனையாளர்களால் மட்டுமே தரமுடியும். நூறு சதவீதம் சேவை மனப்பான்மை இருந்தால் மட்டுமே அது முடியும். இருவரது கடந்த கால வாழ்க்கை அத்தகைய நம்பிக்கையை தருவதாக இல்லை.

 

காமராஜரை போல் தொண்டு செய்வதுதான் அரசியல் என்று அரசியல் நடத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும். புகழுக்காகவும், அதிகாரத்துக்காகவும், பொருளாதாரத்துக்காகவும் அரசியலுக்கு வருவதுதான் தற்போதைய சூழலாக மாறி உள்ளது.

 

ஊழலற்ற ஆட்சி, நிர்வாகத்தை கவர்ச்சி அரசியல் செய்பவர்ளாலும், கவர்ச்சி அரசியல் மீது நம்பிக்கை கொண்டவர்களாலும் தர முடியும் என்று உறுதியாக நம்ப முடியாது.

 

இவ்வாறு  தொல்.திருமாவளவன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...