???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை: கமல் அறிவிப்பு 0 டெல்லி தீவிபத்து: உயிரிழப்பு 43 ஆக அதிகரிப்பு 0 உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி மக்கள் மன்றம் 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்திற்கும் தனிக்கொடி உருவாக்க வேண்டும்: தொல். திருமாவளவன்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   03 , 2019  00:22:07 IST

தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பேட்டியளித்தபோது ”தமிழக அரசு மேட்டூர் உபரிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது போல், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த விரைவாக தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்“ என்றுக் கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர் “தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட நாளினை அந்த மாநில தினங்களாக கொண்டாடி வருகின்றனர்.

கர்நாடகா தினத்தில் அங்குள்ள பொதுமக்களும் அமைச்சர்களும் கர்நாடகாவிற்கு என உருவாக்கப்பட்ட தனி கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர் இதன் அடிப்படையில் தமிழகத்திற்கும் தனிக்கொடி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த சங்கரலிங்கனார் அவரின் தியாகத்தை போற்றும் வகையில் அந்த நாளில் அவருக்கு உரிய மரியாதையை அரசு செலுத்த வேண்டும். மேலும் அக்டோபர் 13-ம் தேதி அவருடைய நினைவு தினத்தில் அரசு வீரவணக்க விழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...