அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை: டீக்காராம் போட்ட ‘நேக்’கான பிளான்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   04 , 2022  08:00:10 IST


Andhimazhai Image
சென்னை திருவான்மியூர் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பயணிகள் சிலர் டிக்கெட் எடுப்பதற்காக தரை தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் வரிசையில் காத்திருந்தனர். தினசரி அதிகாலை 4 மணிக்கே திறக்கப்படும் டிக்கெட் கவுண்ட்டர் நேற்று திறக்கப்படாமல் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் இதுபற்றி கேட்டனர்.
 
உடனே அங்கு வந்த ரெயில்வே போலீசார், வெளியே பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, டிக்கெட் கவுண்டர் உள்ளே டீக்காரம் என்ற ஊழியர், அங்கிருந்த ஜன்னலில் கை, கால்கள் பின்னால் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து திணிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டு கை, கால் கட்டுகளை அவிழ்த்த ரெயில்வே போலீசார், இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.
 
ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாதபோது அதற்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் டீக்காராமும், அவரது மனைவியும் ரெயில் நிலையத்திற்குள் செல்வதை கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரெயில்வே பணம் ரூ. 1.32 லட்சத்தை தாங்களே கொள்ளையடித்துவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. 
 
ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்திக்கொண்ட டீக்காராம் தனது மனைவியுடன் இணைந்து இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். நேற்று அதிகாலை டீக்காராம் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் சென்ற சில நிமிடங்களில் அவரது மனைவி பின் தொடர்ந்து ரெயில் நிலையத்திறு சென்றுள்ளார். 
 
அங்கு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த ரூ.1.32 லட்சம் பணத்தை டீக்காராம் தனது மனைவியிடம் எடுத்துக்கொடுத்துள்ளார். மேலும், கொள்ளை போனது போல பிம்பத்தை உருவாக்க மனைவியை தனது கை, கால்களை கட்டிவிட்டு வாயில் துணியை வைத்து செல்லும்படி கூறியுள்ளார்.
 
இதனையடுத்து, டீக்காராமின் மனைவி பணம் ரூ.1.32 லட்சத்தை எடுத்துக்கொண்டு தனது கணவன் கூறியபடி அவரது கை,கால்களையும், வாயையும் கட்டிவிட்டு ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
 
இதனையடுத்து, ரெயில்வே ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரெயில்வே பணம் ரூ.1.32 லட்சத்தை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...