அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நான் படித்த பள்ளியிலும் இப்படி தான் நடந்து- நடிகையின் அதிர்ச்சி அனுபவம்!

Posted : வியாழக்கிழமை,   மே   27 , 2021  13:46:30 IST

”பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது” உள்ளிட்ட செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டதாக நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார்.


சென்னை கேகே நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பின் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை கவுரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.


இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ-மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டதாக கெளரி கூறியுள்ளார்.


மேலும், அப்பள்ளியில் தற்போது படிக்கும் மாணவிகளும் இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...