???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குப்பை அள்ளி மோடி விளம்பரம் தேடுகிறார்: திருநாவுக்கரசர் விமர்சனம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   13 , 2019  22:31:27 IST

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று சென்னை திரும்பிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘இந்திய பிரதமரும் சீன அதிபரும் இங்கு வந்தது மகிழ்ச்சியானது தான். இதனால் மக்களுக்கு என்ன நடந்தது என்பது முக்கியம். பல கோடி செலவு செய்து நடந்த நிகழ்வு. இதனுடைய பயன் என்ன? சீன பொருட்கள் சந்தையில் அதிகளவில் இறக்குமதி ஆகிறது. ஆனால் நீண்ட நாட்கள் உழைக்காது. இந்தியாவை மார்க்கெட்டாக மாற்றாமல் வணிகர்கள் மற்றும் மக்கள் பயன் பெறும் வகையில் ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும் என நம்புகிறோம்.

வேட்டி, சட்டை அணிவதால் தமிழராக முடியாது. குப்பைகளை எடுப்பது சாதனை கிடையாது. இதுமலிவான விளம்பரம். இதனால் மக்களுக்கு பயன் இல்லை. மோடி சாதனைகளால் மக்களைக் கவர வேண்டும். வேட்டி கட்டுவதாலும் குப்பை அள்ளுவதாலும் மக்களை கவர நினைக்கிறார்" என விமர்சித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...