???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுட்டுக்கொலை: பாஜக-வினர் கைது!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   10 , 2019  22:40:58 IST

மேற்கு வங்கத்தில் கிருஷ்ணகஞ்ச் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்யஜித் பிஸ்வாஸ். இவர் புல்பாரி என்ற இடத்தில் நடந்த தனியார் அமைப்பின் சரஸ்வதி பூஜை விழாவில்  பங்கேற்றார். மெழுகுவர்த்தி மூலம் விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கிவைத்துவிட்டு மேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்த அவரை பின்னால் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென கைத்துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
 
அதில் குண்டுபாய்ந்த சத்யஜித் பிஸ்வாஸ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார். அதைப்பார்த்த கூட்டத்தினர் அலறியடித்து ஓடியபோது துப்பாக்கியால் சுட்டவரும் கூட்டத்தோடு, கூட்டமாக ஓடித் தப்பினார். துப்பாக்கிச் சூட்டிற்கு சற்று முன்னதாகவே அங்கிருந்து சென்றதால் அமைச்சர் ரத்னகோஷ் உயிர் தப்பினார். சம்பவஇடத்தில் ஆய்வு செய்த காவல்துறையினர் சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றினர். எம்.எல்.ஏ கொல்லப்பட்டது தொடர்பாக 3 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாக நாடியா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 
கொல்லப்பட்ட சத்யஜித் பிஸ்வாசிற்கு அண்மையில்தான் திருமணம் நடந்திருந்தது. இந்நிலையில் எம்எல்ஏவின் கொலைக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...