???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'விளம்பரத் தட்டிகள் தொடர்பாக அரசு சட்டம் இயற்ற வேண்டும்' - தொல். திருமாவளவன்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   13 , 2019  09:03:40 IST


Andhimazhai Image
தமிழக அரசு விளம்பரத் தட்டிகள் தொடர்பாக அரசு சட்டம் இயற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 
இதுகுறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
"சென்னை, பல்லாவரம் பகுதியைச் சார்ந்த இளம்பெண் சுபஶ்ரீ அவர்கள் விபத்தில் சிக்கி பலியானது மிகவும் வேதனையளிக்கிறது. சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியொன்றின் விளம்பரத் தட்டி, இருசக்கர வண்டியில் பயணித்த சுபஶ்ரீயின் மீது சரிந்து விழுந்ததால், அவர் தடுமாறி தரையில் வீழ்ந்துள்ளார். அப்போது அவர்மீது லாரி மோதியதில் பலியாகியுள்ளார். இது சகித்துக்கொள்ள இயலாத மிகவும் கொடிய துயரமாகும். அவரை இழந்து வாடுகிற அவரது கும்பத்தினருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக்கொள்கிறோம்.
 
விபத்து நேர்வதற்குக் காரணமானவர்கள்மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் சுபஶ்ரீயின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
 
விளம்பரத் தட்டிகள், சுவர் விளம்பரங்கள், கொடி தோரணங்கள் ஆகியவை தொடர்பாக காவல்துறை ஓரவஞ்சனையான அணுகுமுறைகளைப் பின்பற்றுகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியினருக்குத் தாராளமான சுதந்தரத்தை  அளிக்கிறது. எந்தக் கட்டுப்பாடுகளும் விதிப்பதில்லை. உயர்நீதிமன்ற ஆணைகளையும் பொருட்படுத்துவதில்லை. சாலைகளை மறித்து குறுக்கும் நெடுக்குமாக விளம்பரப் பாதாகைகளை வைக்க அனுமதிக்கிறது. போக்குவரத்து இடையூறுகளைப் பற்றியும் கிஞ்சித்தும் கருத்தில்
கொள்வதில்லை. அனைத்து அத்துமீறல்களையும் அனுமதிப்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
 
பல்லாவரத்திலும் இதே அணுகுமுறையைத்தான் காவல்துறை கையாண்டுள்ளது. அதன் விளைவாகவே சுபஶ்ரீயின் சாவு என்பதை அறியமுடிகிறது. எனவே இந்தப் பலிக்கு அரசும் காவல்துறையுமே பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன், விபத்துக்குக் காரணமாகும் வகையில் அலட்சியமாக செயல்பட்டுள்ள அரசியல் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
அதேவேளையில், விளம்பரத்தட்டிகள் தொடர்பாக பொதுவான வழிகாட்டுதல்கள் அல்லது வரையறைகள் ஏதுமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, தமிழக அரசு இது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
 
இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகளின் நிகழ்ச்சிகளில் விளம்பரத்தட்டிகள் அமைக்கும் போக்குகளை முற்றாக கைவிட வேண்டுமென இதன்மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது". இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...