???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் 0 கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் 0 நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'ஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம்செலுத்தும் மெய்யான வீரவணக்கம்' - தொல். திருமாவளவன்

Posted : புதன்கிழமை,   நவம்பர்   27 , 2019  08:12:08 IST


Andhimazhai Image
ஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் மெய்யான வீரவணக்கமாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி மாவீரன் சங்கர். யாழ்ப்பாணத்தில் நடந்த சிங்களப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சைக்காகத் தமிழகம் வந்த நிலையில், 1982 நவம்பர் 27 அன்று வீரச்சாவடைந்த மாவீரன் சங்கரின் நினைவுநாளே, அதன்பின்னர் வீரச்சாவடைந்த ஒட்டுமொத்த மாவீரர்களுக்குமான வீரவணக்க நாளாக இன்றுவரை நினைவுகூரப்படுகிறது.
1982 நவம்பர் முதல் 2009 மே வரையில் அடிப்படையான போராளிகள் முதல் மூத்த தளபதிகள் வரை ஏறத்தாழ அறுபதாயிரம் புலிகள் மாவீரர்களாகக் களப்பலியாகியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்தும் ஒரேநாளாக நவம்பர் 27 ஆண்டுதோறும் போற்றப்படுகிறது. இந்நிலையில், விடுதலைக்களத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் யாவருக்கும் இந்நாளில் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
 
மாவீரர்களின் ஈகம் மண் விடுதலைக்கே. மண் விடுதலை மக்கள் விடுதலைக்கே. மக்கள் விடுதலை மானவாழ்வுக்கே. அடுத்தடுத்து வரும் தலைமுறையினரின் மானவாழ்வுக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நமது நன்றியுணர்வுக்கான வரலாற்றுக்கடன். அதேவேளையில், அது அம்மாவீரர்களின் கனவை நனவாக்கும் வெற்றிகரமான செயல்திட்டங்களை வரையறுப்பதற்கும் அவற்றை நிறைவேற்றுவதற்கும் வழிவகுப்பதாக அமைய வேண்டும். ஈழவிடுதலை என்னும் இலக்கை நோக்கி இளந்தலைமுறையினரை வழிநடத்துவதாக அமைய வேண்டும்.
 
ஈழவிடுதலை என்பது இனி நடைமுறைக்கு ஏதுவானதாக அமையுமா என்கிற கேள்வி எழுவது இயல்பேயாகும். அமைதிவழியில் கால் நூற்றாண்டும் ஆயுதவழியில் கால்நூற்றாண்டும் களமாடி வியத்தகுச் சாதனைகள் புரிந்து உலகின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், எளிதில் மீளமுடியாத பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சூழலில் இனி எங்ஙனம் இலக்கை எட்டுவது என்னும் தயக்கம் எழவே செய்யும். எனினும், இச்சூழலில் நம் விடுதலைக்கான களத்தை எவ்வாறு அமைப்பது என்னும் வகையில், கடந்தகால படிப்பினைகளிலிருந்தும் நிகழ்கால சர்வதேச அரசியல் சூழல்களிலிருந்தும் ஆழ்ந்து சிந்திப்பதே தற்போது நம்முன்னுள்ள மிகப்பெரும் சவாலாகும்.
 
ஈழத்தந்தை செல்வா காலத்தில் நமது சிக்கல்கள் இனம்சார்ந்த ‘உள்நாட்டு அரசியல் சிக்கலாக’ இருந்தது. போராட்டங்களும் அறவழி-அமைதிவழி சார்ந்தவையாக அமைந்தன. மேதகு பிரபாகரன் காலத்தில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையான ‘பிராந்திய பாதுகாப்பு அரசியல் சிக்கலாகப்’ பரிணாமம் அடைந்தது. போராட்டங்களும் ஆயுதம் தாங்கிய படைமுறை சார்ந்தவையாக அமைந்தன. அமெரிக்க இரட்டைகோபுர மாளிகைகளின் தகர்ப்புக்குப் பின்னர், ஈழச்சிக்கல் வல்லரசுகளின் பாதுகாப்போடு தொடர்புடைய ‘சர்வதேசச் சிக்கலாகக்’ காணப்பட்டது. அதனால், மக்களோடு தொடர்பில்லாத அல்கொய்தா இயக்கத்தோடு மக்கள் இயக்கமான விடுதலைப்புலிகளையும் இணைத்துப்பார்க்கும் நெருக்கடிநிலை உருவானது. வல்லரசுகளுக்கு எதிரான பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது என்னும் பெயரில் மக்கள் விடுதலைக்கான இயக்கத்தையும் அழித்தொழிக்க அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறுநாடுகள் கூட்டுசேர்ந்து கொண்டன. அதன்விளைவாகவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அரங்கேறியது. விடுதலைப்புலிகள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் இலட்சக்கணக்கில் அழித்தொழிக்கப்பட்டனர்.
 
பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. இனப்படுகொலைக் குற்றவாளிகள் இராஜபக்சே குடும்பத்தினர் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக, தற்போது ஆட்சியதிகார பீடத்தைக் கைப்பற்றிவிட்டனர். தாயகத்தில் எஞ்சிய தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை. தேசியப்பாதுகாப்பு என்னும் பெயரில் சிங்களப்படையினரின் கைகளில் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு அதிகாரத்தையும் வழங்கும் வகையில் தற்போது அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசும் சிங்கள அரசுடனான நெருக்கத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவே துடிக்கிறது.
 
இந்நிலையில், உலகத் தமிழர்களின் வருங்கால செயல்திட்டம் என்ன என்பதே தற்போது தீர்மானிக்கப்படவேண்டியதாகும். இராஜபக்சே குடும்பம் விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக மெத்தனமாக செயல்பட்ட ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கவனத்தை நம்மை நோக்கி ஈர்க்கவும், அவர்களின் ஆதரவை வென்றெடுக்கவும், இந்தியாவின் பகைமையைத் தவிர்க்கவும், தமிழீழத்தை வென்றெடுக்கவும் கூடிய வகையில் நமது அரசியல் கொள்கைகளை வரையறுத்து, அவற்றுக்கான வருங்கால செயல்திட்டங்களை வகுத்திட மாவீரர் நாளான இந்நாளில் நாம் உறுதியேற்போம். ஈழமண்ணை மீட்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் மெய்யான வீரவணக்கமாக அமையும்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...