???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குண்டர் சட்டம் பயன்பாடு: மறுஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை! 0 ராஜினாமா செய்தார் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே! 0 நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு மந்திரி சபை ஒப்புதல்! 0 கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்: விஷால் அறிக்கை! 0 ஆவணப்படங்கள்தான் ஒரு படைப்பாளிக்கான சுதந்திரத்தை வழங்க முடியும்: ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் நேர்காணல்! 0 கந்துவட்டி கொடுமை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் தற்கொலை 0 மனங்கள் இணையவில்லை என்பது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் 0 மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றம்! 0 போய்ஸ் கார்டனில் சோதனை நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி: செங்கோட்டையன் திட்டம் 0 பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்: நீதிமன்றம் 0 சத்துணவு முட்டை நிறுத்தமா?: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி டெல்டா மாவட்டங்களை மத்திய, மாநில அரசுகள் சீரழித்து விட்டன: திருமாவளவன்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   08 , 2017  08:08:21 IST

காவிரி டெல்டா மாவட்டங்களை மத்திய, மாநில அரசுகள் சீரழித்து விட்டன என்று கதிராமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.

 

 

கதிராமங்கலம் கிராம மக்கள்,  ஓஎன்ஜிசிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இன்று 28-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

வளம் கொழிக்கும் டெல்டா மாவட்டங்களை மீத்தேன் திட்டத்தால் மத்திய-மாநில அரசுகள் சீரழித்து வருகின்றன. கதிராமங்கலம் மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக பல நாட்களாக போராடி வருகின்றனர். இந்த மண்ணின் மக்கள் வாழும் இடத்தை விட்டு வெளியேற முடியாது. ஆகவே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும்.

 

பேராசிரியர் ஜெயராமன் உள்பட கைது செய்யப்பட்ட 10 பேரை உடனடியாக ஜாமீனில் விடுதலை வேண்டும். மண்ணுக்காக, மக்களுக்காக போராடியவர்களை சட்டத்தால் ஒடுக்கும் போக்கானது ஜனநாயகத்திற்கு புறம்பானது. மனித உரிமைகளுக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...