அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திருமாவளவன் ஒரு சமூகவிரோதி: ஹெச்.ராஜா காட்டம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   17 , 2021  19:55:06 IST

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் பா. ஜ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மற்றும் பாஜகவினர் 150க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக்கடைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தங்கியிருந்தனர்.
 
பா. ஜ. க. மூத்த தலைவர் எச் ராஜா, கைதானவர்களை சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திண்டுக்கல் மாவட்டம் சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் கடந்த அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளித்தனர். இருப்பினும் மதுபானகடை அகற்றப்படாததால் போராட்டம் நடைபெற்றது.
 
ஒரு சமயத்தில் சாலைகளில் நாம் இருவர், நமக்கு இருவர் நமக்கு ஒருவர் என எழுதப்பட்டிருந்தது. தற்போது பார்த்தால் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா? சோதனை குழாய் குழந்தை என பெயர் பலகைகள் நிறைந்துள்ளது. 1967 க்குப் பின் தான் கருணாநிதி மதுபான கடையை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இந்த மதுபானக்கடைகளால்தான் அவனவனக்கு தனக்கு பிள்ளை பெற்க முடியாமல் போய்விட்டது. ஆகையால் மதுபானக் கடைகளை முழுவதுமாக அகற்றி அவனவன் பொண்டாட்டிக்கு அவனவன் பிள்ளை பெற்பதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.
 
அதிமுகவில் உள்ள குழப்பத்திற்கும் சசிகலா மீண்டும் அரசியல் பிரவேசம் அடைவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு காரணமாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதிற்கு, ‘திருமாவளவன் அவரே குழப்பத்தில் தான் இருப்பார். யார் அந்த திருமாளவன் சரக்கு மிடுக்கு பேச்சுகாரர் தானே. திருமாளவன் அவர்  ஒரு சமூக விரோதி’ என்று தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...