![]() |
பிரதமர் மோடியின் பினாமிதான் தொழிலதிபர் அதானி - திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டுPosted : ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21 , 2021 12:15:18 IST
நேரடியாக தம்மால் தொழில் நடத்த முடியாது என்பதால் அதானியை வைத்து பிரதமர் மோடி தொழில் நடத்துவதாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
பழவேற்காட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் அதானி துறைமுக விரிவாக்கத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன் மோடியின் நண்பர் என்பதால் கடந்த 20 ஆண்டுகளில் உலக பணக்காரர்கள் வரிசையில் 40வது இடம் பிடித்தவர் அதானி எனவும் ஆண்டுக்கு 1 லட்சம் கோடி லாபம் ஈட்டுவதாகவும் கூறினார். நேரடியாக தம்மால் தொழில் நடத்த முடியாது என்பதாலே அதானியை வைத்து மோடி தொழில் செய்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் பினாமி தான் அதானி என திருமாவளவன் பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார்.
|
|