???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வேல்முருகனை சந்தித்து நன்றி தெரிவித்த திருமாவளவன்!

Posted : வெள்ளிக்கிழமை,   மே   31 , 2019  01:22:19 IST

மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றதற்கு, வேல்முருகனை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாறு காணாத மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு பாடுப்பட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம்.

அந்த வகையில், திமுக கூட்டணியின் வெற்றிக்கு மகத்தான பங்களிப்பை செய்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை நேரில் சந்தித்து எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளேன்.

அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக கூட்டணி வெற்றிக்காக வேல்முருகன் அருமையாக பணியாற்றினார். அதேபோல், விசிக போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதியிலும் வாழ்வுரிமை கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் வெற்றிக்காக பாடுப்பட்டனர்.

வன்னியர் மற்றும் இதர சமூகத்திற்கு எதிரி என்பது போல் ஒரு தோற்றத்தை ஆதாய அரசியல் செய்யும் சிலர் திட்டமிட்டு தொடர்ச்சியாக பரப்பி வந்தனர். ஆனாலும், அந்த அவதூறு பிரசாரம் முறியடிக்கப்பட்டு அனைத்து கட்சியை சார்ந்த வன்னியர் சமூக மக்களும், தலித் அல்லாத, இஸ்லாமியர் அல்லாத, கிறிஸ்துவர் அல்லாத மிக சமூக மக்களும் மனமுகந்து வாக்களித்ததன் விளைவாக தான் சிதம்பரம் தொகுதியில் நான் வெற்றி பெற முடிந்தது.

ஆனால், இந்த வெற்றி என்பது, அனைத்து சமூதாய மக்களின் நல் ஆதரவும், குறிப்பாக வன்னிய சமூதாய மக்களின் நல் ஆதரவும் கிடைத்ததின் அடிப்படையிலே இந்த வெற்றியை பெற முடிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...