???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது! 0 சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன்

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   21 , 2019  21:50:29 IST

அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் நிலைநாட்டப்படவில்லை; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது என்று திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.  அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வேல்முருகன், அயோத்தி வழக்கு தீர்ப்பில் தமக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தினார்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அயோத்தி வழக்கில் நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என தெரிவித்தார். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்திய திருமாவளவன், சர்ச்சைக்குரிய இடத்தை பொது இடமாக அறிவித்திருக்கலாமே, என்றும் கேள்வி எழுப்பினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...