![]() |
புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை தமிழகத்திற்கான ஒத்திகை - திருமாவளவன்Posted : திங்கட்கிழமை, பிப்ரவரி 22 , 2021 11:20:05 IST
புதுச்சேரி அரசியலில் நடப்பது தமிழகத்திற்கான ஒத்திகை என்பதை உணர முடிவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் ஆட்சிக்கவிழ்ப்பு என்ற அநாகரிகமான அரசியலை அரங்கேற்றும் பாஜகவின் போக்கை கண்டிப்பதாகவும், இதுபோன்ற கட்சி மாறிகளுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து அரசியல் கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதனை தமிழகத்திலும் சனாதானிகள் விரிவுபடுத்துவார்கள் என்பதை அறிய முடிவதாகவும் கூறியுள்ளார். மக்களிடம் ஒரு இடத்தில் கூட வாக்கு வாங்கி வெற்றிபெற முடியாத பாஜக, இப்படி பின்வாசல் வழியாக காலூன்ற முற்படுவதை புதுச்சேரி மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
|
|