???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் 0 கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் 0 நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திருமாவளவன் போட்ட எதிர்ப்பு கோலம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   31 , 2019  13:48:56 IST

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, தமிழகத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த சிலரை போலீசார் கைது செய்தனர். இதனைக் கண்டிக்கும் விதமாக, சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகம் முன், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கோலமிட்டார். விசிகவைச் சேர்ந்த பெண்கள் புள்ளி வைத்துக் கொடுக்க, அந்த புள்ளிகளை இணைத்து திருமாவளவன் கோலமிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கோலமிடுவது, அறவழி போராட்டம் என்றார். பெண்கள்தான் கோலம் போட வேண்டுமென்ற பழைய எண்ணத்தை உடைப்பதற்காகவே தான் கோலம் போட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மார்கழி மாதத்தில் மிச்சமிருக்கிற நாட்களில், No CAA, NO MODI என கோல வழி எதிர்ப்பு போராட்டத்தை தொடர வேண்டும் என்றும் தமிழக மக்களை திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...