???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரிபுராவில் அரசு விடுமுறை பட்டியலில் இருந்து உழைப்பாளர் தினம் நீக்கம்!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   05 , 2018  23:19:27 IST

உழைப்பாளர் தினத்தை அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கிய திரிபுரா மாநில அரசுக்கு அம்மாநில எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
 
உலகம் முழுவதும் மே 1-ம் தேதி உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் உழைப்பாளர் தினம் அரசு விடுமுறையாக உள்ளது. 2019-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்ட திரிபுரா மாநில அரசு, உழைப்பாளர் தினத்தை பட்டியலில் இருந்து நீக்கியது. பதிலாக அந்த நாளை வரையறுக்கப்பட்ட விடுமுறையாக குறிப்பிடப்பட்டது.
 
மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சங்கர் பிரசாத் தத்தா, “மே தினம் என்பது எந்த அரசியலையும் சாராதது. உலகம் முழுவதும் அன்றைய நாள் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாநில அரசின் இந்தச் செயல் உழைக்கும் மக்களை அவமதிப்பதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பில் புகார் செய்யப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சங்கம் கூறியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...