அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெ. மறைவுக்குப் பிறகு ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயன்றார்- முதல்வர் குற்றச்சாட்டு 0 டிராக்டர் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள் 0 தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் ராகுல்! 0 இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு 0 சூர்யாவைப் பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி 0 டிவிட்டரில் அசுரனாக மாறிய தனுஷ் 0 பா.இரஞ்சித் படத்தில் ஹீரோவான யோகிபாபு 0 நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் - சூழல் ஆர்வலர்கள் 0 சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு 0 சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை 0 சசிகலா பூரண குணமடைய விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி 0 டாஸ்மாக் கடை முன்பு மதுபான விலைப்பட்டியல் வைக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு 0 சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனை தகவல் 0 லாரன்சுடன் கைகோர்த்த பிரியா பவானிசங்கர்! 0 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தனிமைப்படுத்தப்பட்ட நபர் மூதாட்டியை கடித்துக்கொன்ற அவலம்!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   28 , 2020  00:37:55 IST

தேனி மாவட்டத்தில் கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட நபர், தெருவில் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே ஜக்கமநாயக்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் மணிகண்கடன் (வயது 32) என்ற இளைஞர், இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊர்க்கு வந்தவரை மாவட்ட சுகாதாரத்துறை, வீட்டுக்கண்காணிப்பில் வைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே வந்த மணிகண்டன், பக்தசேவா தெருவில் தனது வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த 90 வயது மூதாட்டியான நாச்சியம்மாளை கழுத்தில் கடித்துள்ளார். நாச்சியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மணிகண்டனை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களையும் மணிகண்டன் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், அனைவரும் சேர்ந்து மணிகண்டனை பிடித்து கயிற்றால், கால் மற்றும் கைகளை கட்டிப்போட்டனர். படுகாயமடைந்த நாச்சியம்மாள், போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி கானவிலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மணிகண்டன், கொரோனா கண்காணிப்பில் இருப்பதால், உடனடியாக, போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், இன்று காலை படுகாயமடைந்த நாச்சியம்மாள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக போடி போலீசாரிடம் பேசிய போது, “மூதாட்டியை கடித்த போது, அருகே இருந்த மக்கள் உடனடியாக மணிகண்டனை பிடித்துக் கட்டிப்போட்டனர். அவரது கையில், சுகாதாரத்துறையின் சீல் வைக்கப்பட்டிருப்பதை வைத்தே, அவர் கொரோனா கண்காணிப்பில் இருப்பது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்டது போல நடந்துகொண்டார்.

தற்போது மூதாட்டி இறந்துள்ள நிலையில், மணிகண்டன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் ஆலோசனை பேரில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...