???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   11 , 2019  22:32:25 IST

தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் இப்பிரச்னை குறித்த கேள்வி ஒன்றிற்கு மக்கள் குறைதீர்ப்பு துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனை கூறியுள்ளார்.

அதில், ”பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து அமைக்கப்படும். ஆய்வகத்தில் இயற்கையாக உருவாகும் வளிமண்டல நியூட்ரினோக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படும்.

இதற்காக 51,000 டன் எடை கொண்ட இரும்பு கன அளவி பயன்படுத்தப்படும். காஸ்மிக் கதிர்களிலிருந்து எழும் ஒலியை கட்டுப்படுத்த மலையை குடைந்த ஆய்வகம் அமைக்கப்படுகிறது.

இந்த ஆய்வகம் எந்த வித கதிர் வீச்சையும் வெளிபடுத்தாததால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...