???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காதலர்களைக் கொன்றவருக்குத் தூக்கு: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

Posted : புதன்கிழமை,   மார்ச்   13 , 2019  22:35:36 IST

சுற்றுலாத் தலமாக விளங்கும் தேனி சுருளி அருவியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
காதலர்களான கல்லூரி மாணவி கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் ஆகியோர், சுருளி அருவியிலிருந்து கைலாசநாதர் குகைக் கோயிலுக்குச் செல்லும் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ. டி போலீசார் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளை என்பவரிடம் நடத்திய விசாரணையில், காதலர்கள் இருவரும் காட்டுக்குள் தனிமையில் இருந்தபோது திவாகர் அவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
 
அதன் பின்னர் கஸ்தூரியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதும், அதை தடுக்க முயன்ற எழில் முதல்வனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததோடு, கஸ்தூரியையும் சரமாரியாக  வெட்டியுள்ளார்.
 
ரத்தவெள்ளத்தில் கிடந்த கஸ்தூரியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கஸ்தூரியையும் கொலை செய்துவிட்டு தப்பித்தது தெரியவந்தது.
 
எட்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம், திவாகர் என்ற கட்டவெள்ளையை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 7 வருட கடுங்காவல் தண்டனையும், ஓர் ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்பை உறுதி செய்ய கோரி தேனி மாவட்ட நீதிமன்றமானது, உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு தீர்ப்பை அனுப்பி வைத்தது, அந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சுப்பையா மற்றும் புகழேந்தி ஆகியோர் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.
 
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள், தேனி மாவட்ட நீதிமன்றம் விதித்த தண்டனைகள் அனைத்தையும் உறுதி செய்திருக்கிறார்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...