???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்தவரைப் பிடிக்க களம் இறங்கிய 100 போலீஸ்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   13 , 2019  22:22:55 IST

பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பென் மோடி. அவர், டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள குஜராத் சமாஜ் பவனுக்கு ஆட்டோவில் சென்று இறங்கியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த தமயந்தி பென் மோடி வைத்திருந்த ஹேண்ட் பேக்கை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, தமயந்தி பெண் மோடி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவருடைய புகாரில், அந்தப் பையில் 56,000 ரூபாய் பணமும், இரண்டு மொபைல் போன்களும், முக்கிய ஆவணங்களும் இருந்தன என்று குறிப்பிட்டிருந்தார். அந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியில்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஆளுநர் ஆகியோரது இல்லங்கள் உள்ளன. தமயந்தி பென் மோடியின் புகாரையடுத்து, அந்த குற்றவாளிகளைப் பிடிக்க 20 குழுக்களைக் கொண்ட 100 காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், தமயந்தி பென் பயணம் செய்த ஆட்டோவை அந்த இரு நபர்களும் 15 நிமிடங்களாக பின்தொடர்ந்தது தெரியவந்தது. அதில், ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 ரூபாய் பணத்தையும், இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...