![]() |
மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31]Posted : வெள்ளிக்கிழமை, மே 25 , 2018 04:57:33 IST
![]() திருப்பத்தூரின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா வரும் மே 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நாடக விழாவில் எட்டு நாடகங்கள் நிகழ்த்தப்பட உள்ளன. அத்துடன் மே 21 தொடங்கி நாடக பயிற்சிப் பட்டறையும் திறன்வாய்ந்த நாடக ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களால் நடத்தப்பட உள்ளது.
நாடக விழா விவரங்கள் :
மேலும் நாடகக் கலையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு விருதுகள் வழங்கியும் சிறப்பிக்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் சே.இராமானுஜம் நினைவு நாடக விருது நாடக இயக்குநர் பிரசன்னா ராமசாமிக்கும், பரீக்ஷா ஞாநி நினைவு விருது எஸ்.மோகன் அனந்தராமனுக்கும், நம்பிக்கை நாடகர் விருது, நாடக இயக்குநர் கோபி மற்றும் அஸ்வினி காசி ஆகியோர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.
கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாற்று நாடக இயக்கம், அரங்கம் என்ற அற்புதமான கலைவடிவத்தின் உச்சபட்ச சாத்தியப்பாடுகளின் மூலம் சமூகத்தின் மாற்று சிந்தனையை முன்னெடுக்கவும் ரசனையை வளர்த்தெடுக்கும் நோக்கிலும் தொடங்கப்பட்டது ஆகும்.
|
|