அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மத்திய அரசின் தவறான கொள்கைகளே பணவீக்க உயர்வுக்குக் காரணம் – ப.சிதம்பரம்

Posted : சனிக்கிழமை,   மே   14 , 2022  11:35:42 IST

அரசின் தவறான கொள்கைகள் பணவீக்க உயர்வை மேலும் அதிகரிக்கச் செய்வதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

 
காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், கட்சியைப் பலப்படுத்துவது, அமைப்பு ரீதியாக சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கும் 'சிந்தன் ஷிவிர்' எனும் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தின்போது பொருளாதாரம் குறித்து விவாதிக்க ப. சிதம்பரம் தலைமையில் பொருளாதாரக் குழுவைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.

 
இந்த நிலையில், ப. சிதம்பரம் இன்று  செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "இந்தியப் பொருளாதார நிலை மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்சியானது சிறப்பானதாக இல்லை.

 
பணவீக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அரசு தனது தவறான கொள்கைகள் பணவீக்க உயர்வை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

 
உலக நாடுகளில் நிலவும் சூழல் பொருளாதாரத்திற்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்த நீட்சிகளைக் கையாள்வதற்கான வழிகள் குறித்து தெரியாமல் அரசு திண்டாடுகிறது.

 
மத்திய-மாநிலங்கள் நிதி உறவுகள் குறித்த விரிவான மதிப்பாய்வுக்கான நேரம் கனிந்துள்ளது. மாநில நிதி நிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமாக உள்ளது.

 
உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பொருளாதாரக் கொள்கைகளை மீட்டமைப்பது பற்றி சிந்திப்பது அவசியமானது" என்றார்.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...