???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு 0 மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு 0 தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் 0 சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 0 முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! 0 எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு 0 பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி! 0 அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகனுடன் சிறிது நேரம் …. நான் வளர்த்த ஆட்டுக்குட்டியை பார்க்க வேண்டும்: கர்நாடக சிங்கம் அண்ணாமலையின் உருக்கமான கடிதம்

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  06:34:19 IST


Andhimazhai Image

  கர்நாடக காவல்துறை அதிகாரியான கே. அண்ணாமலை ஐபிஎஸ் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழரான அண்ணாமலை தன் மிகச்சிறப்பான பணியால் கர்நாடகா காவல்துறையின் ’சிங்கம்’ என்று பெயரெடுத்தவர். அவர் பணியை ராஜினாமா செய்வதற்கு ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்கிறதா? யாரேனும் மிரட்டுகிறார்களா ?என்று பல குழப்பம்  மக்கள் மனதில் எழுந்தது.

இந்நிலையில் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில், தனது ராஜினாமா குறித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. அதன் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:

எல்லோர்க்கும் எனது வணக்கம் ,  மே 28ம் தேதி எனது ராஜினாமா கடிதத்தை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டேன். எனது ராஜினாமா தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக விரிவான விளக்கத்தை உங்களுக்கு தரவேண்டும் என்று நினைக்கிறேன். 6 மாத கால யோசனைக்கு பிறகே பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். நான் 9 வருடங்கள் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியிருக்கிறேன். இந்த காக்கி சட்டையின்  பெருமையையும், அதை அணியும்போது ஏற்படும் உணர்வை பற்றியும் என்னோடு வேலை செய்தவர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். ஒரு காவல்துறை அதிகாரி என்பவன் கடவுளுக்கு அடுத்துள்ளவன் என்று நான் நம்புகிறேன்.

அதேபோல் இந்த பணியில் இருக்கும் அழுத்தமும் அதிகம் என்பதையும் நான் அறிவேன். பணி அழுத்தத்தின் காரணமாக என்னால் உறவினர்களின் விழாக்கள், முக்கியமான நிகழ்வுகள் என்று எதற்கும் செல்ல முடியவில்லை. எனக்காக வாழ்ந்தவர்களுக்கு என்னால் எந்த உதவும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். மனம் திறந்து பேசவேண்டும் என்று நினைத்தபோது அதை பேச முடியவில்லை.

கடந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றிருந்தேன். அந்த பயணம்தான் எனது மனக் கண்ணைத் திறந்தது. ஐபிஎஸ் அதிகாரி மதுகர் ஷெட்டியின் மரணம் என்னை அதிகம் யோசிக்க வைத்தது. தேர்தலிக்கு முன்பே எனது ராஜினாமா கடிதத்தை நான் கொடுக்க விரும்பவில்லை.

அடுத்து என்ன ?

நான் அடுத்து என்ன செய்யபோகிறேன் என்று பலர் கேட்கின்றனர். எனக்கு சற்று இடைவேளை வேண்டும். எனது மகனுடன் விளையாட வேண்டும். அவனுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். மீண்டும் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் வளர்த்த ஆட்டு குட்டி,  இப்போது நான் சொல்வதை கேட்குமா ? என்று பார்க்க வேண்டும்.  நான் இனி ஒரு காவல்துறை அதிகாரி அல்ல. என்னோடு பணியாற்றிய மூத்த அதிகாரிகள் , கான்ஸ்டபிள் மற்றும் எல்லாவருக்கும் எனது நன்றியை கூற விரும்புகிறேன்.

எனது முடிவு உங்களை காயப்படுத்தியிருந்தால் மனிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது பணியின்போது ஏற்பட்ட தவறுகளுக்கு வருந்துகிறேன். உங்களை பிரிவதில் அதிகம் வருந்துகிறேன்’’.

என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான கே. அண்ணாமலையின் பிறந்த ஊர் கரூர் அருகே சின்னதாராபுரம். கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகப் பணி நியமனம் பெற்றார். கர்நாடகம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்கலாவில் ஏ எஸ் பியாகப் பதவி வகித்தார். 2015 ஆம் ஆண்டு எஸ்பி யாகப் பதவி உயர்வு கிடைத்தது. கர்நாடகாவின் அயோத்தி என்றழைக்கப்படும் பாபா புதன்கிரியை மையமாக வைத்து நடந்த கலவரத்தில் அண்ணாமலையின்  செயல்பாடு பலரைக் கவர்ந்தது. அதனால் அவர் சிங்கம் என்று அழைக்கப்பட்டார்!click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...