அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மதங்களைக் கடந்த மனிதர்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   04 , 2021  11:35:34 IST


Andhimazhai Image

கடந்த மே-21ஆம் தேதி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி அடுத்தடுத்து உயிரிழக்க, அதைப் பார்த்த அவர்களுடைய  24 வயது மகளும் அதிர்ச்சியில் மயங்கி விழுகிறார். பிறகு அந்தப் பெண் மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவருக்கு மயக்கம் தெளிகிறது. பின்னர் என்ன செய்ததென்றே தெரியாமல் மறு நாள் காலை வரை அழுது கொண்டிருக்கிறார். உதவி செய்வதற்கு உடன் பிறந்தவர்களோ அல்லது உறவினர்களோ இல்லை!

 
இதைக் கேள்விப்பட்டு ஒருவர் நேரடியாக களத்தில் இறங்குகிறார். உயிரிழந்தவர்கள் ஆவடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர் ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளரிடமிருந்து வாட்ஸ் அப் வழியாக உரிய சான்றுகளைப் போராடிப் பெறுகிறார். அதை மருத்துவமனையில் சமர்ப்பித்து உடலைப் பெறுவதற்கான அனுமதியும் வாங்குகிறார். அடுத்து, உடலைத் தகனம் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்குகிறார். அடுத்த நாள் மருத்துவமனைக்கு வரும் இவர் உடல்களைப் பெற்றுக்  கொண்டு மின் மயானத்திற்கு செல்கிறார்.

 
யார் உடலை முதலில் அடக்கம் செய்வது என்ற கேள்வி எழ, ”முதலில் மனைவியை தகனம் செய்யுங்கள், அவங்க தீர்க்க சுமங்கலியாகப் போய் சேரட்டும்” என்கிறார்.

 
இவர் பெயர் ஜின்னா..!

 
இறந்து போன பிராமண தம்பதிகளுக்கு இறுதிச் சடங்கு செய்தவர் இஸ்லாமியர் என்பதால், இது செய்தியாக ஊடகங்களில் வெளிவந்தது. இதை எதையும் பொருட்படுத்தாமல் எப்போதும் போல் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜின்னாவிடம் தொடர்பு கொண்டு பேசினோம், “சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில், 2001ஆம் ஆண்டு ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசாக பணியாற்றத் தொடங்கினேன்.. அந்த சமயத்தில் தான் சுனாமி வந்தது. சுனாமி மீட்புப் பணியில் அந்தக் குழு தீவிரமாக பணியாற்றியது. சீனிவாசபுரத்தில் சுனாமியில் சிக்கிக் கொண்ட 13 பேரின் உடல்களை மீட்டேன். இது ஊடகங்களில் செய்தியாக கூட வெளிவந்தது.

 
காவல் துறையுடன் இருந்ததால் என்னை இன்ஃபார்மர் ஆள்காட்டி என்று சிலர் குற்றம்சாட்டினர். இதனால் மக்களுக்கு வேறுவிதமான முறையில் சேவைசெய்யலாம் என்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உதவி செய்யலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி கடந்த எட்டு வருடமாக இந்த பணியை மேற்கொண்டு வருகிறேன்” என்றார். ஜின்னா ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

 
”பகலில் வங்கி வேலையை முடித்துவிட்டு. இரவு பத்து மணிக்கு மேல், மருத்துவமனைக்கு செல்வேன். இரவு நேரங்களில் விபத்துக்குள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர்களுக்கு அட்டண்டர் யாரும் இருக்கமாட்டார்கள். சுயநினைவு எதுவுமின்றி மருத்துவமனைக்கு வருபவர்களின் வீட்டு முகவரியைக் கண்டுபிடித்து, அவர்களின் பெற்றோரை அல்லது உறவினர்களை மருத்துவமனைக்கு வரவழைக்கும் பணியைத் தான் கடந்த எட்டு வருடமாக செய்து வருகிறேன்” என்றவர், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளேன் என்றார்.
 

தொடர்ந்து பேசியவர், “சமீபத்தில், இளம் பெண் ஒருவர் அளவுக்கதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு, கடலில் விழுந்துட்டாங்க. ஆம்புலன்ஸ் மூலமாக அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, முதலுதவி செய்தோம். அதன் பிறகே ஓரளவுக்கு சுயநினைவு வந்தாங்க. பெற்றோருடைய தொலைபேசி எண் கேட்டால், அவரால் எதையும் தெளிவாக சொல்ல முடியவில்லை. வீட்டு முகவரி மட்டும் viruga என்று எழுதினார். அதை வைத்து அந்தப் பெண் விருகம்பாக்கத்தை சேர்ந்தவராகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு, நடந்த விஷயத்தைத் தெரிவித்தேன். அவர்கள், பெண் யாரும் காணாமல் போனது போன்ற புகார் எதுவும் வரவில்லை என்றார்கள். இதனால், நானே விருகம்பாக்கத்திற்கே நேரடியாக சென்று, இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியை தேடிக் கண்டுபிடித்தேன். ஏனெனில் அந்தப்பெண் இஸ்லாமியர்.

 
நள்ளிரவுக்கு மேல் எந்த வீட்டில் லைட் எரிகிறது என்பதைப் பார்த்து, அந்த வீட்டார்களிடம்,  பெண்ணின் போட்டோவை காண்பித்து விசாரிக்கத் தொடங்கினேன். ஒருவர் மட்டும் அந்த பெண்ணுடைய உறவினர்களின்  தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். முதலிரண்டு பேர் நீண்ட நேரமாக கால் எடுக்கவில்லை. அதற்குப் பின்னர், ஒருவர் மட்டும் முதல் ரிங்கிலேயே கால் எடுத்தார். அவரிடம் நடந்த விஷயங்களை சொல்லாமல், வேறு சில காரணங்களைக் கூறி, அவரை ஒருவழியாக மருத்துவமனைக்கு வரவழைத்தேன்.

 
மருத்துவமனைக்கு வந்தவர் அந்த பெண்ணின் தந்தை. அவரிடம் அப்போதுதான் நடந்த உண்மையான விஷயத்தை தெரிவித்தேன். அவர், நாங்கள் தான் ஏதோ தவறு செய்துள்ளோம் என்று நினைத்துக் கொண்டார். பிறகு நடந்த விஷயத்தை தெளிவாகக் கூறியவுடன் சமாதானம் ஆனார். அப்போது விடியற்காலை நான்கு மணி என்பதால் டிஸ்சார்ஜ் செய்ய முடியாது. மருத்துவர்கள் மற்றும் போலீசாரிடம் பேசி உடனே அந்த பெண்ணை டிஸ்சார்ஜ் செய்து அவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்” என்கிற ஜின்னாவுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

 
“ நான் செய்யும் செயல்களுக்கான அனைத்து  புண்ணியங்களும் என் மகளுக்குப் போய் சேர வேண்டும்,” என்கிறார் நிதானமாக.

 

                                                                                                                                                      -தா.பிரகாஷ்

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...