அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஈரானில் பற்றி எரியும் ஹிஜாப் விவகாரம்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   23 , 2022  09:58:26 IST

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. அதன்படி  9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்கள் இஸ்லாமிய சட்டங்கள் ஹிஜாப் அணிவது உள்ளிட்டவற்றை கண்காணிக்க நெறிமுறை பிரிவு என்று காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் மேற்கு ஈரான் பகுதியான குர்திஸ்தான் பகுதியில் இருந்து தலைநகரில் தெஹ்ரானுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அந்த பெண் முறையாக ஹிஜாப் அணியாமல் இருந்துள்ள நிலையில், நெறிமுறை காவல்துறையினர் அந்த பெண் வந்த வாகனத்தை தடுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியாததாக கூறி, அவரை கைது செய்து அவரை தாக்கியதில் மாஷா அமினி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
அந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியையைும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெண் உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். குர்திஸ்தான் அதை சுற்றியுள்ள பிராந்தியங்களில் பெண்கள் ஒன்றுதிரண்டு சர்வாதிகாரி சாகட்டும் என அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதொல்லா அலி காமினிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சில பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர்புகை குண்டுகளை வீசி  காவல்துறையினர் கலைத்தனர். இந்நிலையில், பல பெண்கள் தங்கள் எதிர்ப்பை உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்கும் விதமாக கேமரா முன்பு தங்கள் தலைமுடிகளை வெட்டியும், ஹிஜாப்பை எரித்தும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றன. இந்த காணொலிகள் தற்போது வைரலாகிவருகின்றன. இதை தடுக்க காவல்துறை போராட்டக்காரர்கள் மீது கடும் அடுக்குமுறையை செயல்படுத்துகிறது. அத்துடன் போராட்டம் குறித்த செய்திகள் பரவுவதை தடுக்க இணையதளம் வெகுவாக முடக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட நகர்களில் பரவிய போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கையில் பொதுமக்கள் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...