???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா?: தங்கம் தென்னரசு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   25 , 2020  00:16:07 IST

முன்னாள் கல்வி அமைச்சரும், எம்.எல்.ஏவுமான தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
 
“தமிழ்நாட்டில் இப்போது பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்த இரண்டே நாட்களில் ‘திடீரென்று’ அது சாத்தியமாகிவிட்டது எனக் கருதும் வகையில், அக்டோபர் 1-ஆம் தேதி 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் செல்லலாம் எனத் தலைமைச் செயலாளர் அறிவித்து இருக்கின்றார்.
 
‘விருப்பத்தின் பேரில்’ என்ற வார்த்தைகளின் பின்னால், கொரோனா தொற்று குறையாத நிலையில், ‘ நமக்கேன் வம்பு’ என்று ‘ நைசாக’ ஒதுங்கிக் கொள்ளும் உத்தி ஒளிந்திருப்பதை எவராலும் எளிதாகவே புரிந்துகொள்ள முடியும். அப்படி இரண்டே நாட்களில் சாத்தியமாக்கும் இந்த ‘ ஜீபூம்பா’ வித்தைகள் தெரிந்தவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால், ஒரே நாளில் கொரோனாவை இந்த நாட்டை விட்டே விரட்டி இருக்கலாமே! என பதிவு செய்துள்ளார்.
 
அமைச்சர் செய்த அறிவிப்பின் ஈரம் காயும் முன்பே இப்படி ஒரு அறிவிப்பு தலைமைச் செயலாளரால் வெளியிடப்படுகின்றதென்றால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குத் தன் துறையில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத வண்ணம் செய்திகள் மறைக்கப்படுகின்றதா? அல்லது பள்ளிக்கல்வித்துறை அதன் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையா? மூத்த அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் ஒரு துறையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அவரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறனவா?அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர் வெளியூரில் இருக்கும் போது அவருக்குத் தெரியாமலேயே  தலைமைச் செயலகத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுப் பத்திரிகை செய்தியாக வெளிவருகின்றனவா? நான் கேட்கவில்லை; நாட்டு மக்கள் கேட்பது என் காதில் விழுகிறது! என முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...