???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாடாளுமன்றத்தில் கூட்டாக தமிழில் முழங்கி பெருமை சேர்த்த தமிழக உறுப்பினர்கள்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   18 , 2019  05:46:32 IST

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். மற்ற மாநில உறுப்பினர்கள் பதவியேற்பைவிட, தமிழக உறுப்பினர்களின் பதவியேற்பு நாடு முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது.
 
அனைவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றதோடு, தமது கொள்கையை நிறுவும்விதமாக முழங்கியது தமிழக எம்.பி-களை தனித்துவமாக முன்னிறுத்தியது. பதவியேற்ற தமிழக உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் வாழ்க முழக்கத்தை பொதுவாக பதிவு செய்தார்கள்.
 
சிதம்பரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், 'வாழ்க அம்பேத்கர், பெரியார் வெல்க ஜனநாயகம் வெல்க சமத்துவம்' எனக் கூறி பதவியேற்றார்.
 
திமுகவை சேர்ந்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி 'வாழ்க தமிழ், வாழ்க பெரியார்' எனும் முழக்கத்தை பதிவு செய்தார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் சு. வெங்கடேசன், 'தமிழ் வாழ்க மார்க்சியம் வாழ்க' எனும் முழக்கத்தை முன்வைத்தார். கோவை எம்.பி நடராஜன் உறுதிமொழி ஏற்றதன் இறுதியில்,' உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என முழங்கினார்.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், 'மதச்சார்பின்மை நீடூழி வாழ்க, இந்தியா நீடூழி வாழ்க' என்றார்.
 
மதிமுகவை சேர்ந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, 'தமிழ்நாடே எனது தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம்' என்றார்.
 
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார், 'பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ராஜிவ் காந்தி புகழ் வாழ்க' என கூறினார்.
 
கொங்கு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், 'வாழ்க தமிழ், வாழ்க தீரன் சின்னமலை, வாழ்க காலிங்கராயன், வாழ்க கோவைச் செழியன்' எனக் கூறினார்.
 
இதில், அதிமுக கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரனாத் மட்டும் மற்றவர்களிலிருந்து சிறிது வேறுபட்டு 'வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்' என கூறி உறுதிமொழி ஏற்றார். 
 
தமிழக மக்களவை உறுப்பினர்களின் ஒன்றிணைந்த இந்த தமிழ் உணர்வு முழக்கம் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது. எனினும், பெரியார், தமிழ் உணர்வு முழக்கங்கள் எழுப்பபட்டபோது சில பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டதும் நிகழ்ந்திருக்கிறது.
 

English Summary
Thamizh vaazhga slogan of Tamilnadu loksabha members

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...