செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்!
கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை அப்போதைய முதல்வர் கலைஞர் திருத்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்!
Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 21 , 2022 18:57:06 IST
கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை அப்போதைய முதல்வர் கலைஞர் திருத்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் திராவிட மொழிகள் அனைத்தையும் இணைத்துப் பாடல் எழுதி இருந்தார். அந்த பாடலில் மலையாளம், கன்னடம் சமஸ்கிருதம் போன்ற மொழிகளை நீக்கிவிட்டு தமிழை வாழ்த்துவதற்கான பாடலாக அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி திருத்தம் மேற்கொண்டார். அதை 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்றும் அறிவித்தார்.
சில வரிகளை நீக்கி விட்டு தமிழ் மட்டும் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்தது தவறு என்று 2007ஆம் ஆண்டு மோகன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில், ஒரு மாநிலத்தின் பாடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் திருத்தப்பட்டது. அதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. அதேபோல் இந்த பாடலுக்கு காப்புரிமை பெற்றவராக மனுதாரர் இல்லை என்பதால் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. அவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 1970 ஆம் ஆண்டு கலைஞரால் திருத்தப்பட்ட பாடல் 35 ஆண்டுகளுக்கு மேலாக பாடப்பட்டு வரும் நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு காத்திருந்து விட்டு வருவதை இப்போது வழக்கு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசின் வாதங்களை ஏற்றுக் கொள்வதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
|