???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு: தமிமுன் அன்சாரி

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   14 , 2019  23:19:30 IST

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி தனது நிபந்தனை அற்ற முழு ஆதரவு தெரிவித்து களப்பணி ஆற்ற உள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
 
மனித நேய ஜனநாயகக் கட்சியின் 6-வது தலைமை செயற்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் நாடாளுமன்றத் தேர்தலில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, ”ஏற்கனவே நாங்கள் மதசார்பற்ற ஜனநாயகக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்து இருந்தோம். அதன்படியே திமுக தலைமையிலான கூட்டணிக்கு எங்களுடைய முழு ஆதரவு என இந்தச் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
 
மேலும் பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேசிய அவர், “தமிழகத்தையே தலை குனிய வைக்கும் சம்பவமாக பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என்று பார்க்காமல், யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்க வேண்டும். யாருக்கும் பாதிப்பில்லாமல் சட்ட பூர்வமாக பாதிக்கப்பட்ட பெண்கள் அணுக வேண்டும். பாரதிய ஜனதா கட்சி அங்கம் பெற்றிருக்கும் அணி நிச்சயம் தோல்வி அடையும். சட்டமன்ற இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை சிறப்பு தலைமைக்குழு முடிவு செய்யும். நாட்டின் பாதுகாப்பிற்காக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைக்கூட ராஜினாமா செய்யத் தயார். அம்மா அவர்களில் நிலைப்பாட்டிற்கு எதிராக தற்போதைய அதிமுக செயல்பட்டு வருகிறது. அதற்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கூடா நட்பு கேடாய் விளையும்’’ என்று அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்தார் தமிமுன் அன்சாரி.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...