???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தம்பி: திரைவிமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   20 , 2019  06:39:28 IST


Andhimazhai Image

சிறுவயதில் காணாமல் போன தம்பியை இழந்து தவிக்கும் அக்கா மற்றும் அவரது குடும்பம். காணாமல் போனதாக கூறப்படும் நபர் பதினைந்து வருடங்கள் கழித்து குடும்பத்தோடு இணைகிறார். அவரை யாரோ கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஏன்? இதற்கு இடையில் காட்டில் வாழும் மக்களின் இடத்தை அபகரிக்க நினைக்கும் ரியல் எஸ்டேட் கும்பல். இதுதான் படத்தின் கதை.

 

திருஷ்யம், பாபநாசம் படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கணக்குகளை சற்று மாற்றி திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

 

கல்லூரி மாணவிகள், நடுத்தர தம்பதிகள், அம்மா- மகள், அக்கா- தங்கை என்று தியேட்டர் முழுவதும் நிறைந்திருந்தது. ஜோதிகாவின் அறிமுக காட்சியில் பெண்கள் பட்டாளம் கத்தி ஆரவாரம் செய்தது.

 

50 ரூபாய் கொடுத்தால் 500 ரூபாய்க்கு நடித்துவிடுவார் என்பார்கள். 90’ஸ் கிட்ஸின் ஆதர்ச நாயகி. கமெர்ஷியல் கதாநயகிதான் ஜோ.... ஆனால் மொழிக்கு பின் அவரிடம் ஒரு தேர்ந்த நடிப்பு வெளிப்பட்டது. ராட்சசியில் அவர் நடிப்பின் வேறொரு பரிமாணத்தை பார்க்க முடிந்தது. தம்பியிலும் அசத்தி இருக்கிறார் ஜோ. கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

 

சத்யராஜ் என்ன வசனத்திற்கு எந்த அளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதிலிருந்து கண்பார்வையில் வெளிப்படும் சிறு வில்லத்தனம் வரை நடிப்பின் கழகமாக இருக்கிறார்.

 

”நால்லாம் எப்படி நடிக்கிறேன் தெரியுமா? சொல்லப்போனா மனிரத்னம் முதல்ல என்னதான் நடிக்க குப்பிட்டுருக்கனும்.. ஆனா யாரையெல்லாமோ கூப்புடுராரு’. என்றும்.. ’தமிழ்நாட்டில் அது எப்போதும் நடக்காது..’ ’அரசியல்ல நீங்க எல்லாம் டெல்லில இருக்கனும். ஆனால் மேட்டுப்பாளையத்துல மாட்டிக்கிட்டீங்க’ என்று நையாண்டியாக நிறைய வசனங்களை அள்ளி வீசுகிறார் கார்த்திக்.

 

அக்கா - தம்பி, எதிர்பாராது நடக்கும் கொலை என்ற திரைக்கதையே படத்திற்கு போதுமானதாக இருந்தது.. ஆனால் பழங்குடிகளின் நிலம் அபகரிக்கப்படும் அரசியலை திரைக்கதைக்குள் திணித்திருக்கிறார்கள். வெற்றிப்படங்கள் சற்று எதார்த்த அரசியலைப்பற்றி பேசியாக வேண்டும் என்ற இப்போதைய ட்ரெண்டுக்கு இது பொருந்துகிறது.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...