???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தாய்லாந்தில் அருவியில் விழுந்து 11 யானைகள் பலி

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   09 , 2019  23:50:51 IST

தாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. மேலும் இந்த பூங்கா புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது. இந்த பூங்காவிற்குள் ராட்சத அருவி ஒன்று உள்ளது. இது நரகத்தின் வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை காலை யானை கூட்டம் அருவியின் உச்சியில் உலாவி கொண்டிருந்தது. அப்போது 3 வயதான குட்டியானை ஒன்று அருவியில் இருந்து தவறி விழுந்தது. இதையடுத்து, குட்டி யானையை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து 5 யானைகள் அருவியில் இருந்து விழுந்தன. இதில் குட்டியானை உள்பட 6 யானைகளும் பாறைகளில் மோதி இறந்தன.

இந்தச் சுவடு மறைவதற்குள் மீண்டும் 5 யானைகள் அதே அருவியில் இருந்து விழுந்து பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பூங்கா ஊழியர்கள், கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானத்தின் மூலம் அருவியை ஆய்வு செய்தனர். அப்போது, அருவியின் கீழே 5 யானைகள் செத்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 5 யானைகளும், எப்போது? எப்படி? அருவியில் இருந்து விழுந்தது என்பது தெரியவில்லை.

காவோ யாய் தேசிய பூங்காவில் மிக குறுகிய காலத்தில் 11 யானைகள் உயிரிழந்தது இதுவே முதன் முறை என கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த 1992-ம் ஆண்டு இதே அருவியில் இருந்து ஒரே நேரத்தில் 8 யானைகள் விழுந்து பலியாகின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...