செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
அரசு தயாரித்த உரை; வரி மாறாமல் அப்படியே வாசித்த கேரள ஆளுநர்!
அண்மையில் தமிழ்நாடு அரசு தயாரித்துக்கொடுத்த உரையின் சில பத்திகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தும், மாற்றியும் படித்தது சர்ச்சையை…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
அரசு தயாரித்த உரை; வரி மாறாமல் அப்படியே வாசித்த கேரள ஆளுநர்!
Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 24 , 2023 09:40:25 IST
அண்மையில் தமிழ்நாடு அரசு தயாரித்துக்கொடுத்த உரையின் சில பத்திகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தும், மாற்றியும் படித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.அதற்கு அன்றைய தினமே எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்துக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு அரசு புகார் மனு அளித்திருந்தது.
இதேபோல் கேரளாவிலும் மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிஃப் முகமுது கானுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த சூழலில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில், அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை அப்படியே படித்தார். அதில் மாநில அரசின் கடன் வரம்பை கட்டுப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. வலுவான தேசம் உருவாக வேண்டுமானால் மாநிலங்கள் அதிகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
|