???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   18 , 2019  22:45:14 IST

தெலங்கானா மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தேர்தல் வாக்குறுதியான ஓய்வூதியத்தை உயர்த்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. முதியோர்கள், விதவைகள், கைத்தறி தொழிலாளர், யானைக்கால் நோய் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு பயனாளர்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ரூ. 1000ஆக இருந்த ஓய்வூதியம் தற்போது ரூ.2,016-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் மாற்றுத்திறனாளிகள், வயதான கலைஞர்கள் ஆகியோருக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.3,016ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஓய்வூதியம் ஜூன் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 கோடி செலவு ஏற்படும் எனவும், அதில் ரூ.11,800 கோடியை மாநில அரசும், ரூ.200 கோடியை மத்திய அரசும் செலவு செய்யும். மேலும் ஓய்வூதியம் பெறும் முதியோருக்கான வயது வரம்பு 65-லிருந்து 57-ஆக குறைக்கப்படுவதாகவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...