???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இலங்கை தேர்தல் : வாக்களிப்பு நிறைவு! 0 15 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்கள் குறிக்கோள்: குமாரசாமி 0 இலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது 0 மாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க. ஸ்டாலின் 0 சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி 0 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் கூட்டணி அரசை அமைப்போம்: சரத் பவார் 0 உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க.ஸ்டாலின் 0 விரைவில் ஒரே நாடு; ஒரே ஊதிய நாள் திட்டம்: மத்திய அமைச்சர் 0 பள்ளிகளில் ஒவ்வொரு பாடவேளை முடிவிலும் 10 நிமிடம் ‘தண்ணீர்’ இடைவேளை: செங்கோட்டையன் 0 சென்னை ஐஐடி மாணவி தற்கொலை: திமுக மாணவரணி போராட்டம் 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தென்னிந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாம்: ராணுவம் எச்சரிக்கை

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   09 , 2019  22:55:05 IST

தென்னிந்திய பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று தென்னிந்தியாவுக்கான லெப்டினட் ஜென்ரல் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் லக்ஷர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், தென்னிந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று ராணுவம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய தென்னிய ராணுவத்துக்கான லெப்டினன்ட் ஜென்ரல் எஸ்.கே.சைனி, ‘தென்னிந்திய பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன. சர் கிரிக் கடற்பகுதியில் ஆளில்லாத சில படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தீவிரவாதிகளை முடக்குவதற்கும் அவர்களுடைய செயல்பாடுகளைத் தடுப்பதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

அவருடைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, கேரள மாநில காவல்துறைத் தலைவர், அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...