தெலங்கானாவில் உள்ள வெமுலாவாடா தொகுதியில் இருந்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் மூன்று முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரமேஷ் சென்னமானேனி.
ஜெர்மனி குடியுரிமையை பெற்றுள்ள இவர், தனது இந்திய குடியுரிமையை புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்திருந்தார். அவற்றை பரிசீலித்ததில் போலி ஆவணங்களை சமர்ப்பித்தது தெரியவந்தது. குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு முன் அவர் ஓராண்டு இந்தியாவில் வசிக்கவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், இந்திய குடியுரிமை கோரி அவர் விண்ணப்பித்த மனுவை நிறுத்திவைப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்போவதாக சென்னமானேனி கூறியுள்ளார்.