???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தெலுங்கானாவில் 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் பணிநீக்கம்!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   07 , 2019  23:40:42 IST

தெலங்கானாவில் 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தெலங்கானா சாலை போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் கால வரையற்ற போராட்டம் அறிவிக்கப்பட்டது. சனிக்கிழமைக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கெடு விதித்திருந்தார். தெலங்கானா போக்குவரத்து கழகத்தில் 49 ஆயிரத்து 340 பேர் பணியாற்றும் நிலையில், முதலமைச்சரின் எச்சரிக்கையை அடுத்து ஆயிரத்து 200 பேர் பணிக்கு வந்தனர். அதனை அடுத்து பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யுமாறு, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்துக் கழகம் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் இருக்கும்போது, வேலைநிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும், தசரா உள்ளிட்ட பண்டிகைக் காலகட்டத்தில் வேலைநிறுத்தம் செய்வது பெரும் குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சந்திரசேகர ராவ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ள சந்திரசேகர ராவ், புதிதாகச் சேர்க்கப்படுபவர்கள் எந்த தொழிற்சங்கத்திலும் சேரமாட்டோம் என உறுதியளித்த பின்னர் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...