???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தெலங்கானாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 57 பேர் பலி

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   11 , 2018  23:54:48 IST

தெலங்கானா மாநிலத்தில் கொண்டகட்டு என்ற பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் மலைக் கோயிலிலிருந்து மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து, ஜக்தியால் என்ற பகுதியை நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. சனிவரம்பேட் என்ற கிராமத்தில்,  மலைப்பாதை வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, விபத்துக்குள்ளானது.
 
அப்போது 4 முறை உருண்ட பேருந்து, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்தது. இதில், 39 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் அடங்குவர்.
 
மேலும் 31 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. பேருந்தில் 87 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமாக பயணிகள் சென்றதால், வளைவில் திரும்பும்போது, பயணிகள் ஒருபுறமாக சாய்ந்ததாகவும், இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...